குடியுரிமையை காக்க ஒரு லட்சம் பேரிடம் கையெப்பம்; தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் 2000 பேர் பேரணியாக சென்று ஆட்சியரிடம் மனு

கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமையை காக்க ஒரு லட்சம் பேரிடம் கையெப்பம் பெற்று பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரம் பேர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் குடியுரிமையை காக்க ஒரு லட்சம் பேரிடம் கையெப்பம் பெற்று பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரம் பேர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர்.



குடியுரிமை சட்டத்திருத்த மசோதவைக் திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக கோவையில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக சுமார் இரண்டாயிரம் பேர் கோவை அண்ணா சிலையிலிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று ஒரு லட்சம் பேர் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆட்சியர் கு.இராசாமணியிடம் வழங்கினர்.



மேலும், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், மத்திய அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி வருகின்ற சூழலில் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது எனவும் தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று முடிவு எடுக்க வேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...