கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது தோனிமுடி எஸ்டேட். இங்குள்ள கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவிலில் நடைபெறவுள்ள திருவிழாவிற்கான பந்தல் போடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சுரேஷ் (42) என்ற தொழிலாளி அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று விட்டு கோவிலுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் சத்தம் போட்டவாறே ஓடினர். அப்போது ஓடிய சுரேஷ் கால் இடறி கீழே விழுந்தார். அவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர், சுரேஷின் சடலத்தை மீட்டு வால்பாறை அரசு மருத்துவ மணைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உடல் கூறு ஆய்வுக்குப்பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குநர் செல்வன், சுரேஷின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் வனத்துறையின் ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தை வழங்கினார். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இச்சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.