கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் அதிகரித்து வரும் சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் பீதி

நீலகிரி: கூடலூர் அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: கூடலூர் அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சுற்றிலும் வனப்பகுதி அமைந்துள்ளது. அதனால், காட்டெருமை, சிறுத்தை, புலி, மான், காட்டுயானை போன்ற வனவிலங்குகள் அவ்வப்போது சுற்றித் திரிவதைக் காண முடியும். வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், போதிய உணவு கிடைக்காததாலும் வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வெளியேறி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், கூடலூர் அடுத்துள்ள பாடந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டு அப்பகுதி வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கால்நடைகளை வேட்டையாட காத்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், மக்கள் நடமாட்டம் இருந்த காரணத்தால் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...