கோவையில் இன்ஸ்பெக்டர் எனக் கூறி செல்போன் மூலம் மிரட்டல் விடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு

கோவை: கோவை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு கடன் விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் என கூறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியருக்கு கடன் விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளர் என கூறி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மிரட்டல் விடுத்த இளைஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை போத்தனூர் அருகே உள்ள சங்கமம் நகரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி ராஜேஸ்வரி (49). இவர் ராம்நகர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் ராஜேஸ்வரி பிரதீப்குமார் என்பவருக்கு தொழில் தேவைக்காக கடன் கொடுத்து உள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்ட பிரதீப்குமார் திருப்பி தர காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ராஜேஸ்வரி செல்போனுக்கு பிரதீப்குமாரின் தம்பி பிரசாந்த், தான் காட்டூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் சதாசிவம் என தெரிவித்ததோடு பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி காட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பிரசாந்த் மீது ஆள் மாறாட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...