நீலகிரி: கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான உதவி ஆய்வாளர் தேர்வு இன்று உதகையில் நடைபெற்றது. இதில் 11,229 பேர் தேர்வு எழுதியதாக கோவை மண்டல ஐஜி கார்த்திகேயன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது.

இதை ஆய்வு செய்த மேற்கொண்ட கோவை மண்டல ஐஜி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மண்டலத்தில் 11,299 பேர் தேர்வு எழுதுவதாகவும் இதில் கோவையில் 5486 பேரும், ஈரோட்டில் 2862 பேரும், திருப்பூரில் 2200 பேரும், நீலகிரியில் 681 பேரும் தேர்வு எழுதி வருவதாக கூறினார்.
இதேபோல், காவல்துறையில் பணிபுரியும், காவலர்களுக்கு தேர்வு இன்று நடைபெற உள்ளதாக தெரிவித்தார். இதனிடைய கோவை, நீலகிரி எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்திருப்பதாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நீலகிரி, கோவை எல்லையில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், எல்லையோர சோதனைச் சாவடிகள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளா, கர்நாடகா காவல்துறையுடன் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் நீலகிரி, கோவை எல்லையில் இல்லை என்றார்.
மேலும், கீழ் கோத்தகிரியில் இரு பழங்குடியினர்கள் மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாகத் தனிப்படை அமைத்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கூறினார். இந்த சந்திப்பின் போது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உடனிருந்தார்.