கோவை: கோவை அடுத்த அன்னூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கோவை: கோவை அடுத்த அன்னூரில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
கோவை மாவட்டம் அன்னூரில் கோவை செல்லக்கூடிய சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பேக்கரி நடத்தி வருபவர் பழனிச்சாமி. இவர் பேக்கரி மற்றும் மளிகை கடை என இரண்டையும் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் காலை முதல் இரவு வரை வியாபாரத்தை முடித்த கொண்டு இரவு கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இன்று அதிகாலை கடையின் வெளிப்புறத்தில் நிழலுக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையின் தார்பாயில் திடீரென தீ பிடித்துள்ளது மெல்ல மெல்ல தீ பரவிய நிலையில் பின்னர் முழுமையான கடைக்குள்ளும் பிடிக்க துவங்கியுள்ளது.

இதனையடுத்து, மளமளவெனப் பரவிய தீ பேக்கரியில் பரவ அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை கடையின் உள்ளே இருந்த மளிகை பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் தீயில் முழுமையாக எரிந்து நாசமானது.
மேலும், பேக்கரியில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த 5 சமையல் எரிவாயு சிலிண்டர்களும் பயங்கர வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்வ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், முழுமையாகத் தீயை அனைத்து கட்டுப்படுத்தினர். இதனால் பெறும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.