வால்பாறை கடைகளில் நெகிழி பயன்பாடு, ஆணையாளர் திடீர் ஆய்வு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்திருப்பதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கடைகளில் நெகிழி பயன்பாடு அதிகரித்திருப்பதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்ததை தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தை பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பவுன்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



பூக்கடைகள், கோலப்பொடி கடைகள் பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் நெகிழி பயன்படுத்தப்படுவதை கண்டு அவற்றை பறிமுதல் செய்தார். மேலும், அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை சந்தை மற்றும் கடை உரிமையாளர்களிடம் நெகிழி பயன்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அபராதம் மட்டுமின்றி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இவ்வாய்வில், நெகிழி பயன்படுத்திய 13 கடைகளுக்கு தலா ரூ 1000 வீதம் அபராதம் விதித்தார். 24 கடைகளுக்கு எச்சரிக்கை குறிப்பு வழங்கப்பட்டது. 



தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்குள்ள பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்ததுடன் சுகாதாரமாக வைத்திருக்க ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...