கோவை: கோவை மாநகரில் உள்ள நான்கு தனியார் கல்லூரிகளில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்திய உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
கோவை: கோவை மாநகரில் உள்ள நான்கு தனியார் கல்லூரிகளில் இன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்திய உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்று உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையம் நடத்துகிறது.
இதில் கோவை மாநகரில் பிஎஸ்ஜி கல்லூரி, ஜி ஆர் டி கல்லூரி, எஸ் என் ஆர் கல்லூரி மற்றும் என் ஜி பி கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிக்கு தேர்வு நிறைவு பெற்றது.
மேலும் இந்த தேர்வு விவரம் குறித்து கோவை மாநகர காவல் துறையினர் கூறும்போது :-
உதவி ஆய்வாளர்க்கான எழுத்துத்தேர்வில் மொத்தம் 5,486 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 3,833 பேர் இன்று தேர்வு எழுதினர். 1653 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அதேபோல பெண்கள் பிரிவில் 749 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 495 பேர் தேர்வு எழுதினர். 254 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவித்தனர் .