கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் கல்லூரிகளை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பல்; 3 பேர் கைது

கோவை: கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து இருவேறு காவல் எல்லைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை: கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து இருவேறு காவல் எல்லைகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அதிக அளவில் அடிமையாகி வருகின்றனர்.

அதேபோல விஷமிகள் வெளி மாநிலங்களிலிருந்து தங்கி வாழ்ந்து வருபவர்களை திட்டமிட்டு கஞ்சா போதைக்கு அடிமையாக்கி வருகின்றனர்.

மேலும், கோவை மாநகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களையும் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

இப்படியிருக்க கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கில் மாநகர காவல் ஆணையாளர், சுமித் சரண் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசாரும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை காட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து நிலையங்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளர் லதா, உதவி ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் ரங்கராஜ், கணேசன், வெள்ளிங்கிரி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சோமனூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்ற ஆணிக்குமாரை கையும் களவுமாக பிடித்தனர். 



இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 1 1/4, கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல, குனியமுத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த குனியமுத்தூர் சுகுணாபுரம் கிழக்கு விஷ்ணு நகர் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் சுபேர் தீன் என்ற சுபேரையும் (34) மற்றும் குட்டை தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜோசப்பின் மகன் ரீகனையும் (17) சுகுணாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றபோது குனியமுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். 

அவர்களிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவ்விரு சம்பவங்களை தொடர்ந்து, காந்திபுரம் காட்டூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காட்டூர் காவல் எல்லை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...