கோத்தகிரியில் திமுக உறுப்பினர் தாமதமாக வந்து வாக்களிக்க முடியாமல் போனதால், அதிமுகவிற்கு ஜாக்பாட்..!

நீலகிரி: காேத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் பதவிக்கான பாேட்டியில் திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினர் வாக்கினை மாற்றி அதிமுகவிற்கு போட்டதால் கடைசி நிமிடத்தில் துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்தது.

நீலகிரி: காேத்தகிரி ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் பதவிக்கான பாேட்டியில் திமுக அல்லது காங்கிரஸ் உறுப்பினர் வாக்கினை மாற்றி அதிமுகவிற்கு போட்டதால் கடைசி நிமிடத்தில் துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்தது.

நீலகிரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக வைச் சேர்ந்த ராம்குமார் வெற்றி பெற்றுள்ள நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று மதியம் நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர், கிருஷ்ணன் வெற்றி உறுதியாகி இருந்த நிலையில் திமுக வேட்பாளர் அற்புதராஜ் வாக்களிக்க தாமதமாக வந்தார் என்பதால் அவரது வாக்கு ஏற்றுக் காெள்ளப்படவில்லை. 

மேலும், ஒரு வாக்கு திமுக கூட்டணியி்ல் இருந்து மாற்றி அதிமுகவிற்கு சென்றதால் மொத்தமுள்ள 14 உறுப்பினர்களி்ல் 13 வாக்குகள் பதிவாகின, இதில் அதிமுக 7 வாக்குகளும், திமுக 6 வாக்குகளும் பெற்றதால் கடைசி நிமிடத்தில் துணை தலைவர் பதவியை திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் தவறவிட்டது. 

இதனைத் தாெடர்ந்து அதிமுக ஊராட்சி மன்ற துணை தலைவராக தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"மொத்த முள்ள 14 இடங்களில் திமுக 6 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தலைவர் பதவியை திமுகவும் துணைத் தலைவர் பதவி காங்கிரஸிற்கும் என திமுக தலைமை அறிவித்திருந்த நிலையி்ல், திமுக உறுப்பினர் தாமதமாக வந்து வாக்களிக்க முடியாமல் சென்றதும், மற்றொரு வாக்கினை கூட்டணியில் இருந்த ஒருவர் மாற்றி அதிமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தது தொடர்பாக விசாரித்து தலைமைக்கு தெரிவிக்கப்படும்", என திமுக மாவட்ட செயலாளர் முபாரக் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...