கோவை: அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் முறையே மாவட்ட குழு தலைவர், மாவட்ட குழு துணைத் தலைவர், ஒன்றிய துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்நிலையில், அன்னூர் 3வது வார்டு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் அதிமுகவை சேர்ந்த டி.கே அமுல் கந்தசாமி 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிய நாயக்கன்பாளையம் ஐந்தாவது வார்டு கார்த்திக் 4 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே அமுல் கந்தசாமிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சாந்திமதி மற்றும் கட்சியினர் அவருக்கு பூங்கொத்து மற்றும் சால்வைகள் அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.