தமிழகத்தில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்பட்டாலும் பதவியை வீசிவிட்டு உங்களில் ஒருவனாக குரல் கொடுப்பேன் - அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி

கோவை: தமிழகத்தில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்பட்டாலும் பதவியை வீசிவிட்டு உங்களில் ஒருவனாக முன்னின்று குரல் கொடுப்பேன் என கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி தெரிவித்தார்.

கோவை: தமிழகத்தில் ஒரு இஸ்லாமியன் பாதிக்கப்பட்டாலும் பதவியை வீசிவிட்டு உங்களில் ஒருவனாக முன்னின்று குரல் கொடுப்பேன் என கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி்.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி பகுதிகளான சுகுணாபுரம்‌, கரும்புக்கடை, குனியமுத்தூர்‌, பி.கே.புதூர்‌ ஆகிய பகுதிகளில்‌ உள்ள நியாயவிலைக்கடைகளில்‌ இன்று (11.01.2020) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்‌ பரிசுத்‌தொகுப்புடன்‌, ரொக்கம்‌ ரூ.1000/- மற்றும்‌ விலையில்லா வேட்டி, சேலைகளை நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ திரு.எஸ்‌.பி.வேலுமணி வழங்கினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகன்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ (தெற்கு) தனலிங்கம்‌, உள்ளிட்ட அரசுத்துறை உயர்‌ அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்நிகழ்ச்சியில்‌ நகராட்சி நிர்வாகம்‌, ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ பேசியதாவது;-

தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ திருநாளை அனைத்து தரப்பு மக்களும்‌ சிறப்பாக கொண்டாட ஏதுவாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு வழங்கிட ஆணையிட்டார்கள்‌. அதன்படி கோயம்புத்தூர்‌ மாவட்டத்திலுள்ள 9, 70,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாவட்டம்‌ முழுவதிலும்‌ உள்ள பொதுவிநியோகத்‌திட்டத்தின்கீழ்‌ 1239 நியாயவிலைக்கடைகளும்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ மூலம்‌ 54 நியாயவிலைக்கடைகளும்‌, மகளிர்‌ சுய உதவிக்குழுக்கள்‌ மூலம்‌ 107 நியாயவிலைக்கடைகளும்‌, கருப்பட்டி உற்பத்தியாளர்கள்‌ கூட்டுறவுசங்கம்‌ மூலம்‌ 18 நியாய விலைக்கடைகளும்‌ என மொத்தம்‌ 1418 நியாய விலைக்‌ கடைகளில்‌ சிறப்பு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம்‌ முந்திரி, 20 கிராம்‌ உலர்ந்த திராட்சை, 5 கிராம்‌ ஏலக்காய்‌ இரண்டு அடி நீளக்‌ கரும்புத்‌ துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்புடன்‌ விழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக குடும்ப அட்டைகள்‌ வீதம்‌ தலா 1000 ரூபாயும்‌ வழங்கப்பட்டு வருகின்றது. மேலும்‌, விலையில்லா வேட்டி சேலை வழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 6,88,923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும்‌, 6,84,468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும்‌ வழங்கப்படுகின்றது. இதற்கென ஆகும்‌ மொத்த தொகையானது ரூ.129.96 கோடியாகும்‌.

மேலும்‌, பொங்கல்‌ திருநாளில்‌ இச்சிறப்புத்‌ திட்டத்தினை யாரும்‌ விடுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில்‌ மாவட்ட வழங்கல்‌ துறையின்‌ மூலம்‌ சிறப்பு திட்டத்தினை செயல்படுத்தி சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றும்‌ சிறப்பு முகாம்கள்‌ செயல்படுத்தப்பட்டது. இம்முகாம்களில்‌ கோவை மாவட்டத்தினைச்‌ சேர்ந்த சுமார்‌ 35,000ம்‌ குடும்ப அட்டைகள்‌ அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. அவ்வாறு மாற்றம்‌ செய்யப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ பொங்கல்‌ பரிசுத்‌ தொகுப்புகள்‌ வழங்கப்பட்டு உள்ளன.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...