கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவருக்கு அ.தி.மு.க வை சேர்ந்த மணிமேகலை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்கு உட்பட்ட காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க வில் 18 உறுப்பினர்களும், தி.மு.கவில் 3 உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மணிமேகலை மகேந்திரன் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவரை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் போட்டியின்றி தேர்வு செய்ததாக அறிவித்தனர்.