திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சத்தியபாமா என்பவர் 17க்கு 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். 17 மாவட்ட கவுன்சிலர்கள் அடங்கிய திருப்பூர் மாவட்ட ஊராட்சிகள் சத்தியபாமா 14 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் தலைவருக்கான தேர்தல் மறைமுக தேர்தலாக இன்று நடைபெற்றது. இதில் பல்லடம், பொங்கலூர், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, ஊத்துக்குளி மற்றும் மூலனூர் உள்ளிட்ட 7 ஒன்றியங்களை திமுகவும், அவிநாசி, திருப்பூர், வெள்ளகோவில், குடிமங்கலம் உள்ளிட்ட 4 ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியது.
மீதமுள்ள குண்டடம் மற்றும் காங்கேயம் ஆகிய பகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். சுயேச்சை வேட்பாளர்கள் இருவரும் அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கேட்டு கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது ஒன்றிய தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய கவுன்சிலர் :
அவினாசி - அதிமுக வேட்பாளர் ஜெகதீசன் தேர்வு
தாராபுரம் - திமுக வேட்பாளர் எஸ்.வி.செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு
குடிமங்கலம் - அதிமுகவை சேர்ந்த சுகந்தி முரளி தேர்வு
மடத்துக்குளம் - திமுகவை சேர்ந்த காவ்யா போட்டியின்றி தேர்வு
மூலனூர் - திமுகவை சேர்ந்த சுமதி போட்டியின்றி தேர்வு
பல்லடம் - திமுகவை சேர்ந்த தேன்மொழி தேர்வு
பொங்கலூர் - திமுகவை சேர்ந்த குமார் தேர்வு
உடுமலை - திமுகவை சேர்ந்த மகாலட்சுமி தேர்வு
வெள்ளகோவில் - அதிமுக வேட்பாளர் சுதர்சன் போட்டியின்றி தேர்வு
காங்கேயம் - சுயேட்சை வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு ( அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டு சுயேட்சையாக போட்டியிட்டவர் )
குண்டடம் - சுயேட்சை வேட்பாளர் சதீஷ் என்கிற குப்புசாமி தேர்வு ( தேமுதிக கட்சியை சேர்ந்தவர், கட்சியில் சீட் மறுக்கப்பட்டு சுயேட்சையாக போட்டியிட்டவர் )
ஊத்துக்குளி - திமுக வை சேர்ந்த பிரேமா வெற்றி
திருப்பூர் - அதிமுகவை சேர்ந்த சொர்ணாம்பாள் தேர்வு