பள்ளிகளில் இனி காலை உணவுத் திட்டம்..! தமிழக அரசின் புதிய திட்டம்?

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் ‘காலை உணவு திட்டத்தை’ தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் ‘காலை உணவு திட்டத்தை’ தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். இதையடுத்து, எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது. இதன்படி தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

அண்மை காலமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியிலுள்ள சுமார் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இட்லி, பொங்கல், தோசை, உப்புமா போன்ற உணவுகள் காலை உணவாகத் தினமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து உள்ளாட்சித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் காலை உணவுத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுப்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, பள்ளி மாணவர்கள் காலை, மதிய வேளைகளில் பசியின்றி இருந்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும் என்றும் காலை உணவாக இட்லி, பொங்கல், சப்பாத்தி மற்றும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவான பச்சைப்பயிறு, குதிரைவாலி, அடை, கேழ்வரகு, சாமைக்கஞ்சி, கொண்டைக்கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்க ஆலோசித்து வருவதாக கூறினார். அதேசமயம், இத்திட்டத்தை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் விரிவுபடுத்தாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இத்திட்டத்தை விரிவாக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் கலந்தாலோசித்த பின்னர் விரிவான திட்ட அறிக்கையுடன் வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...