கோவை: சூலூர் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மனைவி சாந்திமதி(55) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கோவை: சூலூர் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு அசோகன் மனைவி சாந்திமதி(55) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் முறையே மாவட்ட குழு தலைவர், மாவட்ட குழு துணைத் தலைவர், ஒன்றிய துனை தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட குழு தலைவராக சூலூர் ஒன்றிய 7 வது வார்டை சேர்ந்த சாந்திமதி மாவட்ட குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக நடைபெற்ற மறைமுக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலில் சாந்திமதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் ஒரு மனதாக மாவட்ட குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதே போல், ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் பெ.ந.பாளையம் 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக நர்மதா, காரமடை ஒன்றியத்தின் தலைவராக அதிமுகவை சேர்ந்த மணிமேகலை, அன்னூரில் 1வது வார்டு பழனிச்சாமி, பொள்ளாச்சி 10வது வார்டு விஜயராணி, கிணத்துகடவு 6வது வார்டு நாகராணி, மதுக்கரை உதயகுமாரி, தொண்டாமுத்தூர் 1வது வார்டு மதுமதி விஜயகுமார் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சூலூர் ஒன்றியம் 8வது வார்டு பாலசுந்தரம் 8-6, ஆனைமலை 2வது வார்டில் சாந்தி 9-4, சுல்தான்போட்டையில் 7வது வார்டு ரத்தினம் 7-6, எஸ்.எஸ்.குளத்தில் 5வது வார்டு கவிதா 3-2 என்ற வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய முடிவுகள் கிடைக்க பெறவில்லை.
இதேபோல, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் நடந்த ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 11வது வார்டை சேர்ந்த லட்சுமி என்பவர் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இன்று காலை 11 மணிக்கு ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த 11வது வார்டை சேர்ந்த லட்சுமி என்பவர் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த 11வது வார்டை சேர்ந்த லட்சுமி என்பவர் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்றார். இதில் நேரம் தாழ்ந்து வந்ததால் மோகனா என்ற தி.மு.க., உறுப்பினரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
மதியம் 3 மணிக்கு மாவட்ட குழு துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.