உதகை பூங்காவில் கிடந்த பச்சிளம் குழந்தையை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்த நீலகிரி ஆட்சியர்

நீலகிரி: சமீபத்தில், உதகை பூங்காவில் கிடந்த பச்சிளங் குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஒப்படைத்தார்.

நீலகிரி: சமீபத்தில், உதகை பூங்காவில் கிடந்த பச்சிளங் குழந்தையை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஒப்படைத்தார்.

உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள வனத்தில், பிறந்து ஒருநாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை யாராே வீசிச் சென்றிருந்தனர். இந்தக் குழந்தையை மீட்ட மாவட்ட நிர்வாகம், உதகையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பாதுகாத்து வந்தனர். மேலும், அந்த குழந்தைக்கு பிரனேஷ் என்ற பெயரிட்டனர். 



இந்நிலையில், இன்று குழந்தை பிரனேஷ் திருவண்ணாமயை சேர்ந்த அரசு அங்கீகரித்த தத்து காெடுக்கும் மையத்திடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து நீலகிரி ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறும் போது, "உதகையில் மஞ்சணக்கொரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு இனியன் என்று பெயர் சூட்டப்பட்டு, திருப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, பிரனேஷ் திருவண்ணாமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து உள்ளோம்."

"துரதிஷ்டவசமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரியில் ஆண் குழந்தை ஒன்று கொன்று புதைக்கப்பட்டது. அந்த குழந்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், சிறப்பாக பராமரித்து குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்திருக்கலாம். காப்பகங்களில் ஒப்படைக்கப்படும் குழந்தைகள், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி முறையாக குழந்தை தேவையானோருக்கு தத்துக்கொடுக்கப்படும்", என தெரிவித்தார். 

நீலகிரி மாவட்டத்தில், பச்சிளம் குழந்தைகளைச் சாலையோரங்களிலும் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளிலும் வீசுவதால், குழந்தைகளுக்கு ஆபத்து நேர்கிறது, என தெரிவித்த ஆட்சியர், இதைத் தடுக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொட்டில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, என கூறினார். 

இந்தத் தொட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை, எனவும் தெரிவித்தார். 

"குழந்தையை வளர்க்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்கள், தயவுசெய்து குழந்தைகளைச் சாலையோரங்களில், குப்பைத் தொட்டிகளில், வன விலங்குகள் நடமாடும் பகுதிகள் மற்றும் முட்புதர்களில் வீசிச் செல்லாமல், இந்தத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம்" என்றார்.

இந்த நிகழ்சியில் குழந்தை நல குழும உறுப்பினர்கள், முனி ரத்தினம், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (பாெறுப்பு )செல்வி எமி மாலு உள்ளிட்டப் பலர் கலந்து காெண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...