கோவை: நகர் புற உள்ளாட்சி தேர்தலிலும் மிகப்பெரிய ஆதரவு அதிமுகவிற்கு இருக்கும் எனவும், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியினை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் 80 சதவீத வெற்றியையும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வெற்றியையும் கொடுத்தற்கு வாக்காளர்களுக்கு நன்றி", என கூறினார்.
மேலும், குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக கோவையை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் இன்று முதல்வரை சந்திக்கின்றனர் என கூறிய அவர், 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் இந்த அரசு ஏற்படுத்தி இருக்கின்றது என தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வழங்கி இருக்கின்றார், என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் மதிப்பினாலான பொங்கல் பரிசு கொடுக்கப்படுவதாக கூறிய அமைச்சர், நகர் புற உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தெரிவித்தார்.
நகர் புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய ஆதரவு அதிமுகவிற்கு இருக்கும் என தெரிவித்தார்.
"கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்", என பெருமையாக தெரிவித்தார்.