கோவை: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம், லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் உள்ள நியாயவிலைக்கடையில் இன்று (10.01.2020) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கம் ரூ.1000/- மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

அதனை தொடர்ந்து லாலி ரோடு, சண்முகராஜபுரம், செல்வபுரத்திலுள்ள ரங்கசாமி காலனி, தெலுங்குபாளையத்திலுள்ள புதூர், பேரூர், குரும்பபாளையம், தாளியர், தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, ஆலாந்துறை, கோவைபுதூர், குனியமுத்தூர், இராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சென்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி., மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா இராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர்(தெற்கு) தனலிங்கம் உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகின்றது. தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள், வன அட்டைத்தாரர்கள் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.
இப்பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி 20 கிராம், திராட்சை 20 கிராம்,ஏலக்காய் 5கிராம், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாட ரொக்கமாக ரூ.1000/-மும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 26.11.2019 அன்று அறிவித்தார்கள். அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள மொத்தம் 2 கோடியே இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் கூட்டுறவுத்துறையின் மூலம் 1239 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 54 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் 107 நியாயவிலைக்கடைகளும், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் 18 நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 1418 நியாய விலைக் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இப்பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பொங்கல் விழாவினை சிறப்புடன் கொண்டாட ஏதுவாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- இத்துடன் இணைத்து வழங்கப்படுகின்றது.
அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 9,70,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாவட்டம் முழுவதிலும் உள்ள 1418நியாவிலைக் கடைகளின் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக குடும்ப அட்டைகள் வீதம் தலா 1000 ரூபாயும் வழங்கப்படுகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 9,70,689 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.14.29 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பும், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000/-வீதம் ரொக்கமாக ரூ.97.06 கோடியும் என மொத்தம் ரூ.111.35கோடி மதிப்பில் விலையில்லா பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகின்றது.
அதுபோலவே, இப்பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலைகளும் இணைந்து வழங்கப்படுகின்றது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் விலையில்லா வேட்டி,சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 6,88,923 பயனாளிகளுக்கு விலையில்லா சேலைகளும், 6,84,468 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டிகளும் ரூ.18.61 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் மொத்தம் ரூ.129.96 கோடி மதிப்பில் வழங்கப்படுகின்றது. நமது மாவட்டத்தில் 06.01.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்ட பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் பணியானது, தொடர்ந்து 10.01.2020, 11.01.2020, மற்றும் 12.01.2020 ஆகிய மூன்று தினங்களில் வழங்கப்படுவதுடன், விடுபட்டவர்களுக்கு 13.01.2020 அன்றும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி வாங்குவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இப்பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலைகளைப் பெற்று அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்புடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாட எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் பேசினார்.