கோவை: வால்பாறை தாலுக்காவிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் விழாவை முன்னிட்டு இலவச வேட்டி சேலை, பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரி. ஏலக்காய், கரும்பு துண்டுடன் ரூ 1000ம் ரொக்கம் இன்று வழங்கப்பட்டது.

இதனை முன்னிட்டு வால்பாறை பகுதியில் உள்ள 48 நியாய விலை கடைகள் மூலம் 17500 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு இன்று மாலை துவக்கி வைத்தார்.

வால்பாறையை அடுத்த கருமலை தேயிலை தோட்டத்தில் 450 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அவர் வழங்கினார். தொடர்ந்து, வால்பாறை நகரில் கோஆப்பரேட்டிவ் காலணியில் உள்ள சிந்தாமணி மார்க்கெட் பகுதியில் உள்ள அமுதம் மற்றும் ஸ்டான்மோர் சந்திப்பில் உள்ள சிந்தாமணி கடைகளில் பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில்கனேசன், வட்டாட்சியர் வெங்கடாசலம், அம்மா பேரவை நரசப்பன், சௌந்தர்ராஜன் உட்பட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.