திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம்; போலீசார் அனுமதி மீறி வந்த சிவசேனா நிர்வாகியின் காரை சேதப்படுத்திய இஸ்லாமிய அமைப்பினர்

திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது காவல்துறை அனுமதியை மீறி வந்த சிவசேனா நிர்வாகிகளின் காரை இஸ்லாமிய அமைப்பினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது காவல்துறை அனுமதியை மீறி வந்த சிவசேனா நிர்வாகிகளின் காரை இஸ்லாமிய அமைப்பினர் அடித்து உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஐக்கிய சுன்னத் ஜமாத் மற்றும் ஜமாஅத் உலமா சார்பில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொழுகை முடிந்த பின்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் பெரிய பள்ளிவாசல், கோம்பை தோட்டம் மற்றும் பெரிய தோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்து ஒரே இடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல அனுமதிக்காமல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.



அப்போது, போலீசாரின் அனுமதியை மீறி சிவசேனா அமைப்பைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் அவ்வழியே தனது காரை ஓட்டி வந்ததோடு போராட்டத்தை வீடியோவும் எடுத்து வந்துள்ளார்.



இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமியர்கள் ஆத்திரமடைந்து சாலையோரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்த ஹெல்மெட்டுகளை எடுத்து காரில் வீசியதில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் முன்புற கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. பின்னர், போலீசார் இரு தரப்பினரிடையேயும் பேசி சிவசேனா அமைப்பை சேர்ந்த நிர்வாகியை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



இதனிடையே, தனது காரை சேதப்படுத்திய இஸ்லாமிய அமைப்பினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் வளம் பாலத்தில் சிவசேனாவை சேர்ந்த நிர்வாகி தினேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...