நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, குடியுரிமை சட்ட மசோதாவை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் எனவும் அடுத்தகட்ட போராட்டமாக மத்திய அரசு ஸ்தம்பிக்கும் வகையில் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.