சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் சென்றடைந்துள்ளது - சித்த மருத்துவ அலுவலர் தனம்

கோவை: சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் சென்றடைந்து உள்ளதாகவும் புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்வதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் தெரிவித்தார்.


கோவை: சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் மக்களிடம் சென்றடைந்து உள்ளதாகவும் புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்வதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் தெரிவித்தார்.

மூன்றாவது தேசிய சித்த மருத்துவ ஆயுஷ் முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அகத்தியர் பிறந்த தினமாக 13ம் தேதியை முன்னிட்டு சித்த மருத்துவத்தின் நன்மைகள் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.



இலவச சித்த மருத்துவ முகாம், மூலிகைகள் மற்றும் மருந்து மூலப் பொருட்களின் கண்காட்சி இதில் இடம் பெற்று இருந்தன.

இந்த முகாம் குறித்து மாவட்ட சித்த மருத்துவர் தனம் கூறுகையில், மாவட்டத்தில் 75 சித்த மருத்துவமனைகள் இயங்கி வருவதாகவும் சித்த மருத்துவம் குறித்து தற்போது அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு பலர் சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். புதிதாக வர்ம கலை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஏராளமானோர் வர்ம சிகிச்சை மேற்கொள்கின்றனர் என தெரிவித்த அவர், அம்மா மகப்பேறு திட்டம் நல்ல முறையில் செயல்படுவதாகவும் இதில் கருத்தரித்த காலத்தில் இருந்து மகப்பேறு வரை தேவையான அனைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இலவசமாக ஊட்டசத்து மருந்துகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.



மேலும், அறுவை சிகிச்சை தவிர்த்து சுகப்பிரசவம் வரை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு செய்வதாகவும் அப்போது தெரிவித்தார். இந்த மருத்துவ முகாமில் பல்வேறு மூலிகை செடிகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், முகாமிற்கு வந்தவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டது. காலை முதல் நடைபெற்று வரும் இந்த மருத்துவ முகாமிற்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...