கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீ.வி ரெஸிடென்சி குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கு அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜீ.வி ரெஸிடென்சி குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனை கண்டித்து சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கூறுகையில், மாநகராட்சி பகுதி முழுவதும் இன்றைக்கு இருக்கக்கூடிய மாநகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை எல்லாம் அந்த பகுதியின் ஒரு பகுதியில் கொட்டி உரம் தயாரிக்கக் கூடிய திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றது. பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை, மைதானம், பூங்கா போன்ற பொது இடங்களில் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு மாத காலமாக செயல்படுத்தி பணிகளை துவக்கி இருக்கிறது.
இதன் ஒருபகுதியாக, ஜி.வி ரெசிடென்சி பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக இதை செயல்படுத்துவதாகவும் இந்த பகுதியால் அதை செயல்படுத்தக் கூடாது என்று இந்த பகுதி மட்டுமல்லாமல் அருகில் இருக்கக்கூடிய பெரியார் நகர், அன்னை இந்திரா நகர், பாரதி நகர், அண்ணா நகர் உள்ளிட்ட இந்த பகுதி முழுக்க கூடிய பொது மக்கள் அத்தனைபேரும் இருக்கக்கூடிய பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் மிகக்கடுமையான ஆட்சேபனை தெரிவித்து வருவதாகவும் கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுக்காமல் குப்பை மேடுகளாக காட்சியளித்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தத் திட்டத்தால் இந்த நகரத்தை குப்பை நகரமாக மாற்றுவதற்கு இந்த அரசும் மாநகராட்சி நிர்வாகமும் முயற்சி செய்து வருவதாகவும் மக்கள் பயன்படுத்தாத ஒதுக்குப்புறமான இடத்தில் எந்த இடத்தில் வைத்தாலும் ஆட்சேபனையில்லை என்று கூறிய அவர், மாநகராட்சி நிர்வாகம் இந்த குப்பை கிடங்குகளை ஊருக்குள் கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் தொடர் போராட்டம் மட்டுமல்ல, மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட கூடிய ஒரு போராட்டத்தை வெகு விரைவில் நடத்தப்படும் என்று கூறினார். இதனையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.