ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு..! மேட்டுப்பாளையத்தில் ரேசன் கடைகளில் அலைமோதிய பொதுமக்கள்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான அரிசி, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவையும் ரொக்க பணம் ஆயிரம் கொண்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான அரிசி, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகியவையும் ரொக்க பணம் ஆயிரம் கொண்ட பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளாலான பொங்கல் பண்டிகையை ஒவ்வொரு தமிழர் குடும்பமும் கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் தாலுக்கா பகுதியில் மட்டும் ஒரு கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தினை இன்று மேட்டுப்பாளையம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் நடத்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் தாலுக்கா முழுவதும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இன்று முதல் துவங்கிய இந்த பொங்கல் பரிசு திங்கட்கிழமை வரை நான்கு நாட்கள் அனைத்து ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...