கோவை: கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளியை சேர்ந்த 170 மாணவர்கள் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை 29,971 புத்தகங்களை கொண்டு கின்ன்ஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

கேம்போர்டு பள்ளியில் காலை எட்டு முப்பது மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரம் நீடித்து பத்து மணியளவில் முடிவு பெற்றது.

பன்னிரெண்டாயிரம் சதுர அடி பரப்பில் புத்தகங்களை கொண்டு இதனை மாணவர்கள் இந்த சாதனை முயற்சி மேற்கொண்டனர். 14 வண்ணங்கள் கொண்ட நோட்டு புத்தகங்களை கொண்டு திருவள்ளுவர் வண்ண உருவத்தை வடிவமைத்து இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இது குறித்து பள்ளி தாளாளர் பூங்கோதை கூறுகையில், ஆசிரியர்களில் வழிகாட்டுதலோடு இந்த முயற்சியை மாணவர்கள் மேற்கொண்டதாகவும் திருவள்ளுவர் தினத்தையொட்டி வான் புகழ் கொண்ட வள்ளுவர் புகழ் போற்றும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த மொசைக் திரு உருவப்பட முயற்சி இதுவரை எங்கும் பதியப்படவில்லை என்றார்.

இதற்கு முன்பு கடந்த 2018ம் ஆண்டு அபுதாபியில் 702.8 சதுரடியில் அமைக்கப்பட்டு இருப்பதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.

தற்போது 1114.82 சதுரடியில் அமைக்கப்பட்டு உள்ளதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 2013ம் ஆண்டு அஞ்சல் அட்டை கொண்டு புலி வடிவம் அமைத்து இருந்தனர். இதனையடுத்து 2017ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் திருவுருவத்தை பேப்பர் கப் கொண்டு உருவாக்கினர். தற்போது திருவள்ளுவர் உருவப்படத்தை உருவாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.