பாஜகவின் தயவோடு தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி உள்ளார் - கி வீரமணி

திருப்பூர்: ஆர்எஸ்எஸ் இந்து நாட்டை உருவாக்குவதற்கு முன்பாகவே பாஜகவின் தயவோடு தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி உள்ளார் என திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பூர்: ஆர்எஸ்எஸ் இந்து நாட்டை உருவாக்குவதற்கு முன்பாகவே பாஜகவின் தயவோடு தப்பிச்சென்ற நித்தியானந்தா கைலாசா என்னும் இந்து நாட்டை உருவாக்கி உள்ளார் என திருப்பூரில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.



திருப்பூரில் திராவிடர் கழகத்தின் விடுதலை நாளிதழ் சந்தா அளிப்பு விழா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பாராட்டு விழா ராயபுரத்தில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக நிறைவேற்றி வருவதாகவும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா , நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தையும் திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.



மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்கள் எனவும் இதை இந்து நாடாக ஆக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார் ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு முன்னதாகவே மத்திய பாஜக அரசின் தயவோடு தப்பிச்சென்று தற்போது கைலாசா எனும் நாட்டை நித்தியானந்தா உருவாக்கி இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். இந்தக் கூட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் திராவிடர் கழகத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...