நீலகிரியில் கோத்தர் இன மக்களின் இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு; பாரம்பரிய இசையுடன் வணங்கி வழிபாடு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடைபெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு பாரம்பரிய இசையுடன் வணங்கிச் சென்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடைபெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு பாரம்பரிய இசையுடன் வணங்கிச் சென்றனர்.



நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தா, கோத்தகிரி, பிக்கட்டி, போன்ற பகுதியில் வசித்து வரும் கோத்தர் இன மக்களான பழங்குடியினர் பாரம்பரிய திருவிழா ஒருவார காலமாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் தாெடர்ச்சியாக மஞ்சூர் பகுதியில் கோத்தர் இன மக்களின் வழிபாட்டு முறையான இறந்தவர்களை நினைவுகூறும் சடங்கு நடை பெற்றது. இதில் முன்னோர்களின் நினைவாக வீட்டின் முன் வாசலில் மூங்கில் கூடைகளில் நிரப்பப்பட்ட சாமை அரிசி, சாணம் ஆகியவை வரிசையில் வைக்கப்பட்டு, இறந்தவர்களின் சடலத்தை காணாதவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாமை அரிசி, சாணத்தினை பாரம்பரிய இசையுடன் வணங்கிச் செல்வது பாரம்பரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டனர். வழிபாடு காலமாக இந்நிகழ்ச்சி ஒரு வார காலத்திற்கு குந்தா, கோத்தகிரியில் கோத்தர் இன பழங்குடி மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...