வால்பாறையில் பள்ளிக்கூட மேற்கூறை இடிந்தது: மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி இயங்கி வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளது காஞ்சமலை தேயிலை தோட்டம். இங்கு அரசு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி இயங்கி வருகிறது. 

இந்த பள்ளி 1958ல் கட்டப்பட்டது. பள்ளிக்கூடத்தின் பக்கவாட்டு சுவர்கள் காட்டு யானைகளின் தாக்குதலால் சேதமடைந்திருந்தது. அதை பழுது பார்க்கும் பணிகள் தற்போது நடை பெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று மதியம் மாணவர்கள் ஆசிரியர்கள் மதிய உணவுக்காக பள்ளிக்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு சென்று விட்டனர். மேலும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பணியாளர்களும் சென்று விட்டனர். 



அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிக்கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் காரணமாக பள்ளிக்கூடத்தில் இருந்த பீரோ, மேஜை சேர் நாற்காலி பெஞ்ச் உட்பட அனைத்து பொருட்களும் முற்றிலும் சேதமடைந்தன.

மேலும், மாணவர்கள் உணவுக்காக சென்ற படியால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் வால்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...