கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண். 44 கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளிலிருந்து சேகரிக்கும் மக்கும் குப்பைகளிலிருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வார்டு எண். 1 துடியலூர் வாரச்சந்தை பகுதியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதையும், வார்டு எண்.3 வளர்மதி நகர் துடியலூரிலும், தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79ல் சுப்பிரமணியபுரம், ஏ.எஸ்.திட்ட சாலையிலும் ஆகிய மையங்களில் பணிகள் முடிவுற்று விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான ஆயத்த பணிகளையும், மேற்கு மண்டலத்தில் வார்டு எண்.24ல் தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி வளாகம், ஆரோக்கியசாமி சாலை ஆகிய இடங்களில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்கள் செந்தில்குமார் ரத்தினம், ஏ.ஜே.செந்தில் அரசன், உதவி செயற்பொறியாளர் ஜான்சன், மண்டல சுகாதார அலுவலர்கள் ராமச்சந்திரன், குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.