நீலகிரி: உதகை அரசு கலைக் கல்லூரியில் பாரம்பரிய நடனத்துடன் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
நீலகிரி: உதகை அரசு கலைக் கல்லூரியில் பாரம்பரிய நடனத்துடன் பொங்கல் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உதகை அரசு கலைக்கல்லூரி நடைபெற்ற இந்த பொங்கல் விழாவினை அக்கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி துவக்கி வைத்தார். இதையடுத்து மாணவிகள் பொங்கோ பொங்கல் என்று ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து, மாணவிகளுக்கு கோலப்போட்டி, ஒயிலாட்டம், சிலம்பம், போன்ற நாட்டுப்புற ஆடல்கள் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை சிறப்பாக வரவேற்றனர்.