திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பூ மார்க்கெட் இடிப்பதை கண்டித்து பூ வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து பழைய மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் இடிக்கப்பட்ட புதிதாக கட்டும் பணியை மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டது.

ஆனால், பொங்கல் பண்டிகை முடியும் வரை எந்த ஒரு பணியை மேற்கொள்ள கூடாது என பூ மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி பூ மார்க்கெட் கட்டிடத்தை இடிக்க வந்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் இடிக்கும் பணியை கைவிடக்கோரியும் மார்க்கெட் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து திருப்பூர் காமராஜ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகை வரை இடிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் பெற்றுத்தந்ததையடுத்து பூ மார்க்கெட் வியாபாரிகள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிலமணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.