நீலகிரி: மலைவேடன் சமூகத்தினர் கன்னியாகுமரியில் மட்டும் உள்ள நிலையில் நீலகிரியில் இவர்கள் பெயரில் சாதி சான்றுபெற்று பழங்குடிகளுக்குக் கிடைக்கும் சலுகைகளை பெறுவதாக தாேடர் பழங்குடியினர் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தோடர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் உதகை எச்ஏடிபி அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தோடர், கோத்தர்,குரும்பர், இருளர், பணியர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியினரின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மலைவேடன் எனக்கூறி பழங்குடியினர் சான்று பெற்று அரசின் சலுகைகளைப் பெறுபவர்களைத் தடைசெய்ய வேண்டும், ஊராட்சி மன்றத் தேர்தலில் பழங்குடிகள் என சாதி சான்று பெற்று போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவி வகிக்கின்றவர்களைப் பதிவு சான்றை ரத்து செய்து அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.