கோவை: கோவை மாநகராட்சியின் 45 துப்புரவுத் தொழிலாளர்கள் 'ஆபத்து' பிரிவில் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன் மூலம் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும்போது அவர்கள் குடும்பத்தினர் ரூ10 லட்சம் வரை இழப்பீடு பெற முடியும்.

மாநகராட்சி மற்றும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்வது அவசியமாகும். அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வேலையின் தன்மையைப் பொறுத்து இத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளின் அடைப்புகளை சுத்தம் செய்வதற்கு துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும் அவர்கள் சாக்கடை கழிவுகளுக்கு மிக நெருக்கமாக பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இயந்திரங்கள் சாக்கடை கழிவுகளை அகற்றும் போது வாயுக்களின் மூலம் துப்புரவுத் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதிற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்குவதன் அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உதவும் என்று கூறினார்.
கோவை மாநகராட்சியானது பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தின் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டிற்காக ஏற்கனவே ஆண்டு பிரீமியம் செலுத்தி வருவதாக கூறிய மாநகராட்சி மூத்த நிறுவன அதிகாரி ஒருவர், 'ஆபத்து' பிரிவில் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விபத்து ஏற்படும் போது ரூ.1 லட்சமும் இயற்கைக்கு மாறான மரணத்தின் போது 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும் என்றார்.
கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதில் கவனம் செலுத்தி வரும் கோவை மாநகராட்சி, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுகாதாரத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பாண்டிகூட் ரோபோவை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.