வால்பாறை நகராட்சிக்கு புதிய ஆணையாளர் பதவியேற்பு; மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் - பவன்ராஜ்

கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை: வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியாக கடந்த 2008ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரை வால்பாறை பேரூராட்சி நிர்வாகம் தனி அலுவலரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. நகராட்சியாக மாற்றப்பட்ட பின் ஆணையாளர் பதவி நிரப்பப்படாமல் நகராட்சி பொறியாளர் பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், உடுமலை நகராட்சியின் ஆணையாளர் பவன்ராஜ் வால்பாறை நகராட்சியின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை நகராட்சி அலுவலர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பவன்ராஜ், வால்பாறை நகராட்சி பகுதிகளில் சுகாதாரம், குடிநீர், சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் வால்பாறை நகரில் வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...