திருப்பூர்: நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை திருப்பூரில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆர்எஸ்எஸ் அஜென்டாவை வெளிப்படையாக அமல்படுத்தி குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலமாக மக்களை பிளவுபடுத்தும் செயலை செய்து வருவதாகவும் அதனை எதிர்த்துப் போராடுகின்ற மாணவர்களை ஒருபுறம் காவல்துறையை கொண்டும் மறுபுறம் இந்து அமைப்புகளை கொண்டும் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், கிராமப்புற மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து திராவிடர் கழகம் வருகின்ற ஜனவரி 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சார இயக்கத்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தற்போதைய அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே இருப்பதாகவும், அந்த அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.