கோவை: கோவை எருக்கம்பெனி பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பெண்களின் உடைமாற்றும் வீடியோவை ஊடகங்களில் வெளியிட காரணமாக இருந்த மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

வீடியோ வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள் இன்று சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வீடியோவை எடுத்த சுபாஷ், ஊடகத்தில் வெளியிட்ட கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர் மருதாச்சலம், ஊடகத்தில் வெளியிட காரணமாக இருந்த மணிகண்டன் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டம் 354(c),66(e),67(a) தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, 4- பெண்களுக்கு எதிரான குற்றம் 2002,3, 4&6 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு அவர்களை கைதி செய்து நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்க்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா மற்றும் சிலர் தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்த போது அங்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து சபிதா தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் கணவர் மணிகண்டன் சூப்பர்வைசர் சுபாஸ் மீது புகார் தெரிவித்தார்.
பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் புகார் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல பெட்ரோல் பங்கில் பணியாற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தராததால் வழக்கு எதுவும் பதியப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுபாஷ் என்பவரால் பெட்ரோல் பங்கில் எடுக்கப்பட்ட வீடியோ ஊடகங்களில் பரவியது. இதையடுத்து, அதில் சம்பத்தப்பட்ட மூவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.