கோவை: வைப்ரண்ட் கொங்குநாடு கோயம்புத்தூர் குளோபல் கண்காட்சி மற்றும் மாநாடு 2020 (VKC GES 2020) கோவையில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: வைப்ரண்ட் கொங்குநாடு கோயம்புத்தூர் குளோபல் கண்காட்சி மற்றும் மாநாடு 2020 (VKC GES 2020) கோவையில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொங்குநாட்டிற்கு பன்னோக்கு துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்த இத்தகைய கருத்தரங்கம் இதுவே முதல்முறையாகும். இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், சேவை அளிப்போர் மற்றும் வணிகர்கள் என அனைவரும் ஒரே தளத்தில் இணைந்து விவாதித்து பகிர்ந்து கொண்டு சிறப்பானதை கொண்டாட உள்ளனர். வைப்ரண்ட் கொங்குநாடு என்ற நிகழ்வு வணிகத்தில் இந்த ஆண்டு பெயரை இடம் பெறச்செய்யும். 250க்கும் மேற்பட்ட கொங்குநாடு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. வைப்ரண்ட் கொங்குநாடு கோயம்புத்தூர் குளோபல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு 2020 நிறுவனத்துடன் குளோபல் நெட்வோர்க் என்ற சர்வதேச வணிக ஆலோசனை நிறுவனம் இணைந்து இதை நடத்துகிறது.

குளோபல் நெட்வொர்க் நிறுவனர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் ஜெகத் ஷா, வைப்ரண்ட் கட்ச், சௌராஷ்டிரா, செராமிக்ஸ், தமிழ்நாடு மற்றும் கோவா போன்றவைகளை முன்னின்று நடத்தி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வைப்ரண்ட் கொங்குநாட்டின் முக்கிய நோக்கம், புதுமைபான கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை, தொழில்கள், தொழில்நுட்பம், வணிகம் மற்றும் திறன் மேம்பாட்டு இளைஞர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, புதிய இணைப்பை உருவாக்கி பகிர்ந்து கொள்வது தான். கொங்குநாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்ந நிகழ்ச்சி உதவும். வைப்ரண்ட் கொங்கு நாட்டு நிகழ்ச்சியில் 2 நாட்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 25 நாடுகளிலும் உள்ள தூதரகங்களின் உதவியோடு கொங்குநாட்டு நிறுவனங்களின் பங்களிப்போடு ரோடு சோ நடத்தப்படும்,” என்றார்.

கொங்குநாட்டு. தொழில் நிறுவனங்களுக்கும் சர்வதேச நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த சர்வதேச கண்காட்சியின் போது, சர்வதேச கண்காட்சி ஒன்றையும் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பெயர் பெற்ற, அங்கீகாரம் பெற்ற வெற்றிகரமான கொங்குநாட்டு வணிகர்கள், 20 நாடுகளிலிருந்து பங்கேற்கின்றனர்.