மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல்; எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மனு

கோவை: மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கோவை: மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 20ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, “நீ ஏதோ பள்ளிக்கூடம், காலேஜ் கேம்பஸ்ல இருக்கன்னு நினைக்காத. எப்படி காம்பவுண்டுக்கு வெளியே கல் வருதோ, அதே மாதிரி வெளியே இருந்து குண்டு உள்ளே வரும்.” என்று பேசினார். இந்த சர்ச்சை பேச்சு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனுவை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில், எச்.ராஜா பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கலவரத்தை தூண்டும் விதமாகவும் மாணவர்கள் மீது குண்டு வீசுவதாக மிரட்டல் விடுத்து பேசியுள்ளார். அதேபோல, மாணவர்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசியுள்ளார்.

மேலும், அவர் வெளியே இருந்து குண்டு உள்ளே போகும் என்று தீவிரவாதம் செல்வதுபோல் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு சீர்குலைந்து உள்நாட்டு கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் செயல்பட்ட ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...