வால்பாறையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்; 10 பெண்கள் உட்பட 65 பேர் கைது

கோவை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு வால்பாறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு வால்பாறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பேரணி வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்புறம் துவங்கி காந்தி சிலை வளாகத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.



அப்போது, மறியலில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக 21.000 வழங்க வேண்டும், தொழிலாளர்கள் சட்டத்தை மாற்றாதே, போனஸ் உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய், தொழில் வரி பிடித்தத்தை ரத்து செய்யவேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, ஆன்லனை வர்த்தகத்தை தடைசெய் உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.



இந்த மறியலில் தி.முக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 65 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வால்பாறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...