துணை சபாநாயகர் பெயரை சொல்லி மிரட்டல்; திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் கோவை ஆட்சியரிடம் மனு

கோவை: துணை சபாநாயகர் பெயரைச் சொல்லி தன்னை மிரட்டுவதாக திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

கோவை: துணை சபாநாயகர் பெயரைச் சொல்லி தன்னை மிரட்டுவதாக திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெண் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார்.

திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமியின் மனைவி வேலுமணி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர் என்றும், திப்பம்பட்டி ஊராட்சி தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதாகவும், அப்போது அதிமுகவைச் சேர்ந்த துணை சபாநாயகர் ஜெயராமனின் மாப்பிள்ளை என கூறி செந்தில் என்பவர் மற்ற அதிமுகவினருடன் சேர்ந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும் அதற்காக 5 லட்சம் தருவதாக கூறி தன்னை மிரட்டினர் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மிரட்டலையும் மீறி தேர்தலில் தான் போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தன்னை தோற்கடித்து விட்டதாகவும் தற்போது பழி வாங்கும் நோக்கில் தன்னுடைய தோட்டத்தில் நடைபெற்று வரும் மாட்டுச் சந்தையில் அதிமுகவினர்களை தூண்டி விட்டு அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும் தன் மீது பொய் வழக்கு போடுவதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.

மேலும், தினமும் தனக்கு மிரட்டல் விடுவதாக மனுவில் குறிப்பிட்டிருந்த அவர், மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...