மத்திய அரசை கண்டித்து திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம்; மார்க். கம்யூ. கட்சியினர் கைது

திருப்பூர்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர்: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பூர் மத்திய தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் போலீஸார் கைது செய்தனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. திருப்பூரில் 80% கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவிடத்திலிருந்து மத்திய தபால் நிலையம் வரை சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும் கார்ப்பரேட்களுக்காக அரசை நடத்தி வரும் பாஜக அரசுக்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் துணை போய்க் கொண்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், மத்திய அரசு இப்போக்கை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்கத்தினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...