திருப்பூர்: நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட தொழில் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விலைவாசி உயர்ந்து விட்டதாகவும் தொழில்கள் நசிந்து விட்டதாகவும் கூறி 12 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கு தமிழகத்தில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று திருப்பூரில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. காதர் பேட்டையில் உள்ள பெரும்பாலான பனியன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே போல், பாத்திர தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதனிடையே, திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.