கோவை: விலைவாசி உயர்வு மற்றும் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையத்தில் மத்திய சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது

தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வு மற்றும் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளர்களை பணியமர்த்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மறியல் போராட்டம் மற்றும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஜ மாவட்ட தலைவர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தொழிற்சங்கங்கள், எஸ்.டி.பி.ஜ தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
அப்போது, தவறான பொருளாதார கொள்கையால் தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறியதால் சாமானிய மக்கள் வெங்காயம், பருப்பு, காய்கறிகள் கூட வாங்க முடியாமல் அவதிப்படுவதாக குற்றம்சாட்டி ஆர்பாட்டகாரர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பிய நிலையில் திடீரென மேட்டுப்பாளையம் உதகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சிங்ஸ் கார்னர் பகுதியில் முழுவதும் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொழிற்சங்கங்கள் நடத்திய இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வணிக வளாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.