நிறுவன செயலான்மை படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு - ஐசிஏஐ தேசிய தலைவர் உறுதி

கோவை: நிறுவனச் செயலான்மை படிப்பு (ஐசிஎஸ்) படித்தவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதாக இந்திய நிறுவனச் செயலான்மை சங்கத்தின் தேசியத் தலைவர் ரஞ்சித் பாண்டே தெரிவித்தார்.

கோவை: நிறுவனச் செயலான்மை படிப்பு (ஐசிஎஸ்) படித்தவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதாக இந்திய நிறுவனச் செயலான்மை சங்கத்தின் தேசியத் தலைவர் ரஞ்சித் பாண்டே தெரிவித்தார்.

நிறுவனச் செயலான்மை படிப்பவர்கள் இந்திய நிறுவனச் செயலான்மை சங்கத்தில் பதிவு செய்து, அவ்வமைப்பு நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வில் வென்று, ஐ.சி.எஸ். பட்டம் பெற்றவர்களுக்கு தென்மண்டல அளவிலான பட்டமளிப்பு விழா கோவையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.காளிராஜ், ஐசிஎஸ் தேர்வில் வென்றவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.



இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறை மண்டல முதன்மை ஆணையர் ராஜேஷ் சோதி பேசுகையில், "நிறுவனத்தின் செயலர்களாக பொறுப்பேற்பவர்கள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். நேர்மையான வழியில் தொழில் நிறுவனத்தை நடத்திச் சென்று, அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். நிறுவனங்களுக்கான விதிகளையும், ஒழுங்குமுறைகளையும் பின்பற்ற வேண்டும்" என்றார்.

விழாவில் சங்கத்தின் தேசிய செயலர் அசோக்குமார் தீக்சித் பேசும்போது, "ஒவ்வோர் ஆண்டும் இருமுறை ஐசிஎஸ் தேர்வு நடத்தி, தகுதி பெற்றவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்தகுதி பெற்றவர்கள் நிறுவனங்களின் செயலர்களாகப் பணிபுரியலாம்" என்று கூறினார்.



பின்னர், சங்கத்தின் தேசியத் தலைவர் ரஞ்சித் பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேசிய அளவில் 60 ஆயிரம் உறுப்பினர்களும், 3.50 லட்சம் மாணவர்களும் உள்ளனர். சர்வதேச அளவில் ஐசிஎஸ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. தற்போது வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம். மேலும், 12 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். நிறுவனச் செயலான்மை சங்கத்துக்கு இந்தியாவில் தற்போது 72 மையங்கள் உள்ளன. மேலும், பல்வேறு நாடுகளிலும், அங்குள்ள நிறுவனச் செயலான்மை சங்கங்கள், வர்த்தக அமைப்புகளுடன் இணைந்து புதிய மையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இது இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.



தேசிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நிறுவனச் செயலர்களையும் பாதித்துள்ளது. எனினும், நெருக்கடிகளில் இருந்து மீண்டு, இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்த நிறுவனச் செயலர்கள் கடுமையாக முயன்று வருகின்றனர். மத்திய அரசின் விதிகள், ஒழுங்குமுறைகள் குறித்து நிறுவனச் செயலர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, ஐசிஎஸ் படிப்பு தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...