கோவையில் பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம்; 4 பேர் மீது 3 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு

கோவை: கோவையில் ரூட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவையில் ரூட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.



கோவை கண்ணப்பநகர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் மணிகண்டன் (35) மற்றும் சவிதா(30). இவர்கள் எருக்கம்பெனி பகுதியில் உள்ள ரூட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தாங்கள் பணி புரிந்து வரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் உடைமாற்றி கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு ரகசியமாக வீடியோ எடுப்பது போன்று தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் கணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய நபரான சூப்பர்வைசர் சுபாஸ் மீது நிர்வாகத் தரப்பில் புகார் தெரிவித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்குப் பின்பு சமரசம் செய்யப்பட்டது. அதேசமயம், ரகசியமாக உடைமாற்றும் அறையில் கேமராவை வைப்பதையும், ரெக்கார்ட் செய்த வீடியோக்களையும் சவிதாவின் கணவர் மணிகண்டன் ஆதாரமாக சேமித்து வைத்திருப்பது நிர்வாக தரப்புக்கு தெரியவந்தது.

இதையடுத்து, இன்று மணிகண்டன் வைத்துள்ள ஆதார வீடியோக்களை அழிக்கும் படி நிர்வாகத் தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மணிகண்டன் வீடியோவை அழிக்க மறுத்ததால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் மேலாளர் சங்கர் கணேஷ், மனிதவள மேம்பாட்டு அதிகாரி கவிதாசன், மக்கள் தொடர்பு அதிகாரி சரவணன், செக்யூரிட்டி அலுவலர் ஆகிய 4 பேர் மீது சரவணம்பட்டி போலீசார் பிரிவு 75 (1)(c), தமிழ்நாடு சிட்டி போலீஸ் சட்டம், 323 காயம் விளைவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் இன்று மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து சென்ற நிலையில், மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த சரவணம்பட்டி போலீசார் அவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...