கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது

கோவை: கோவை உக்கடம் பகுதியில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் சுமார் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபகாலமாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்தாண்டு மொத்தம் 425 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் தனது பெற்றோருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்த இளம் பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசித்து வரும் முகம்மது அசன் (53) என்ற முதியவர், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்துப் புகுந்து கடந்த இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து முதியவர் முகமது அசனை கைது செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் பிரபாவதி, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தார். மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...