மத்திய தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டம்; திருப்பூரில் 1000 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர்: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் தொழில் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி அளவிற்கு தொழில்கள் உற்பத்தி, வங்கிகள் பணப் பரிவர்த்தனை, அன்னிய செலாவணி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும்.


திருப்பூர்: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக திருப்பூர் தொழில் மாவட்டத்தில் சுமார் 1000 கோடி அளவிற்கு தொழில்கள் உற்பத்தி, வங்கிகள் பணப் பரிவர்த்தனை, அன்னிய செலாவணி உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்படும்.



மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, பொதுத் துறைகளை தனியார் வசம் ஒப்படைப்பது, தவறான சட்டத் திருத்தத்தை எதிர்த்தும் தொழிலாளர்களின் 44 சட்டங்களை மாற்றி 4 தொகுப்புகளாக பிரித்து தொழிலாளர்கள் உரிமைகளைப் பறித்தும் மக்கள் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வங்கிகளின் சங்கங்கள் உள்ளிட்ட 200 சம்மேளனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.



அதன்படி இன்று தொழில் மாநகர் மாவட்டமான திருப்பூரில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் குறைத்த அளவே இயக்கப்பட்டு வருகிறது. பின்னலாடை உள்ளிட்ட ஆடை உற்பத்தி நிறுவனங்கள் விசைத்தறி பாத்திர உற்பத்தி தொழில்களுக்கு இன்று தொழிலாளர்கள் செல்லாத காரணத்தினால் சுமார் 200 கோடி அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் 354 வங்கி கிளைகளில் பெருவாரியான வங்கிகள் இன்று செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் இதில் பணிபுரியும் 2000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். இதனால் பணப்பரிவர்த்தனை காசோலை பரிவர்த்தனை அன்னிய செலாவணி வர்த்தகம் என 800 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...