கோவை: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கம் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மத்திய தொழிற்சங்கங்களான ஐஎன்டியூசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், எல்பிஎப் உள்ளிட்ட 10 சங்கங்களில் சார்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுக்கக்கூடாது, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க சட்டம் இயற்றவேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியமாக மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட கால பணி முறையை கைவிட வேண்டும், அமைப்பு சார தொழிலாளருக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும், மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரள செல்லும் 27 பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர் பேசுகையில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்துக் கழகம் கோவை சார்பாக 18 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், தனியார் என 9 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் நடைபெறும் பந்த் காரணமாக பாதுகாப்பு கருதி இந்த 27 பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கேரளா செல்லும் பயணிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கினர். அதே சமயம் கோவை மாநகர் பகுதிகளில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.