நீலகிரி: நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம்; பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம்; இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில், நாளை, (8ம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (செவ்வாய்க் கிழமை), மாலை 6 மணிக்கு, தொழிற்சாலையின் நுழைவாயில் அருகே கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படட்டது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அசாேகன் மற்றும் திலிப் ஆகியாேர் கூறும் பாேது, ''புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்; உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும்; தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட கோரியும், நாடு முழுவதும், 8ம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது,'' என்றனர்.